தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், தக்கலை காவல்துறை ஆய்வாளர் கிறிஸ்டி மற்றும் பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அசோக் தலைமையில் நேற்று, ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடியிலும், மக்கள் பார்க்கும் வகையிலும் ‘அவசர உதவி எண்கள் கொண்ட QR குறியீடு ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் கீழ் 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் போக்குவரத்து காவல்துறையினரால் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.