தக்கலை போலீசார் நேற்று மாலை மணலி சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, உரிய அனுமதி இன்றி பாறை பொடி ஏற்றிச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தினர். லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் மணிகண்டன், உரிமையாளர் மைக்கேல் ராஜன் மற்றும் கல்குவாரி உரிமையாளர் ஜார்ஜ் ஆண்டனி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, டிரைவர் மணிகண்டனை கைது செய்தனர்.