பேச்சிப்பாறை பகுதியில் நேற்று (பிப்.26) கள்ளச்சாராயம் காய்ச்சுவதை அறிந்த தக்கலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், சதீஷ் (43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராய ஊறல், பானை, ரப்பர் டியூப்புகள், குடம், கப், மரப்பலகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சதீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.














