இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் 5வது புத்தக கண்காட்சி தக்கலையில் நேற்று தொடங்கியது. தக்கலையில் உள்ள அரசு ஊழியர் சங்க வளாகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி திறப்பு விழாவிற்கு முன்னாள் எம்எல்ஏ பாலச்சந்திரன் தலைமை வகித்தார். பத்மநாபபுரம் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் திறந்து வைத்தார். மாவட்ட முதன்மை உரிமைகள் நீதிபதி கார்த்திகேயன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார், அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெகதேவ் பெற்றுக்கொண்டார். விழாவில் நீதிபதி கூறியதாவது, இந்த புத்தக கண்காட்சி தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறுள்ளது.














