
தக்கலை, மயிலோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் மரிய ராஜேந்திரன் (59) குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், வெளியூரில் இருந்த மகன் ஜெர்மின் ஜோசப் வந்து தந்தையுடன் சமாதானம் பேசியும் அவர் கேட்கவில்லை. நேற்று அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டார். தக்கலை போலீசார் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









