தக்கலை: ஸ்கூட்டர் மீது லாரி மோதி முதியவர் பலி

0
273

சிராயன்குழி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (68). இவரது 2வது மகள் அஸ்வினி என்பவரின் திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழை அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்க நேற்று தனது ஸ்கூட்டரில் திருமண அழைப்பிதழ் கொண்டு சாமியார்மடம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஸ்கூட்டரில் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே பால்ராஜ் உயிரிழந்தார். தக்கலை போலீசார் அவர் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here