தக்கலை:   பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் மீது வழக்கு

0
236

தக்கலை அருகே மருதூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் சம்பவ தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (32) என்பவர் இளம்பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்து ஆபாசமாகப் பேசி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். உடனடியாக இளம்பெண் சத்தம் போடவே தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் தக்கலை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here