முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ரவி (36) கட்டிடத் தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் நேற்று மாலையில் பைக்கில் தக்கலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அழகியமண்டபம் பகுதியில் செல்லும்போது எதிரே வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ரவி, அவரது மனைவி மற்றும் பின்னால் மற்றொரு பைக்கில் வந்த நட்டாலம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன், அவரது மகள் சித்தா, பயிற்சி டாக்டர் ஆன்சியோ ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.