மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் (52) என்பவர் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவரது வீடு பூட்டிய நிலையில் இருந்தபோது, நேற்று முன்தினம் நள்ளிரவில் கதவை உடைத்து திருடர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்களுக்கு எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து தக்கலை போலீஸ் டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.