தக்கலை பகுதியைச் சேர்ந்த 21 வயதான எம்பிஏ பட்டதாரி விக்னேஷ், வெளிநாட்டு வேலை பிடிக்காமல் ஊர் திரும்பிய நிலையில், காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று (பிப்.23) வீட்டு மாடியில் காதலிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தக்கலை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














