தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் அனுமதி இன்றி ஓலை பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் நடத்திய சோதனையில் 32 கிலோ 650 கிராம் வெடிமருந்துகள் மற்றும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக முருகன் (48), குமரேசன் (70), கோலப்ப பிள்ளை (85) ஆகிய 3 பேர் தக்கலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.