தக்கலையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மணலி சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பைக்கில் நின்ற புஷ்பநாதன் (27) மற்றும் ஜெர்பின் (19) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் அனுமதி இன்றி கஞ்சா இருந்ததை கண்டுபிடித்த போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களது பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.














