தக்கலை அருகே புங்கறை பகுதியில் காரில் சென்ற தம்பதியை பைக்கில் வந்த இரு இளைஞர்கள் வழிமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தடுத்தபோது, இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில், தக்கலை போலீசார் பைக் எண்ணை அடிப்படையாகக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட திக்கணக்கோடு பகுதியைச் சேர்ந்த கெர்ஷன் (20) மற்றும் மூலச்சல் பகுதியைச் சேர்ந்த டெர்ஜின் ஆகிய இருவரை கைது செய்தனர்.