கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பட்டகசாலி யன்விளையை சேர்ந்தவர் மதியழகன் (வயது 60), டெம்போ டிரைவர். இவருக்கு வாயில் புண் இருந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டும் குணமாகவில்லை. இதனால் உணவு சாப்பிட முடியாமல் மதியழகன் அவதிப்பட்டார். இது அவருக்கு மனவேதனையை அளித்தது. இந்த நிலையில் மதியழகன் நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப் பார்த்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி மதியழகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.














