Home மாநில செய்திகள் வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும்

வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும்

0

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நேற்று அதிகபட்சமாக திருப்பத்தூரில் 36.1 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலையாக சேலத்தில் 15.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version