Home உலக செய்திகள் டெலிகிராம் சிஇஓ சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி: ரஷ்யா அறிவிப்பு

டெலிகிராம் சிஇஓ சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி: ரஷ்யா அறிவிப்பு

0

தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் காரணமாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்யாவின் பிரதான உள்நாட்டு பாதுகாப்பு முகமை புதன்கிழமை அன்று கூறியதாவது: ரஷ்யாவில் சைபர் மோசடி, கூட்டுப் படுகொலை, தீவிரவாதம் மற்றும் பல்வேறு நாசவேலைகளை திட்டமிடும் உக்ரைன் உளவுத்துறை, தீவிரவாத அமைப்புகள் திட்டமிடவும், அதை அரங்கேற்றவும் டெலிகிராம் தளத்தை பயன்படுத்துகிறது.

அப்படி டெலிகிராமில் ஆக்டிவாக உள்ள சேனல்கள், சாட்களை அந்நிறுவனம் நீக்க தவறியது. அதனால் தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தன் மீது ரஷ்யா கிரிமினல் விசாரணையை தொடங்கியதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பவெல் துரோவ் கூறியிருந்தார். தங்களது டெலிகிராம் செயலியை தடை செய்ய இந்த குற்றச்சாட்டு ஜோடிக்கபப்ட்டதாகவும், கருத்து சுதந்திரம் மற்றும் பிரைவசி உரிமைகள் நசுக்கப்படுவதாக அவர் குற்றச்சாட்டு வைத்தார். இந்நிலையில், அவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

41 வயதான அவர், ரஷ்ய நாட்டை சேர்ந்தவர். அவரது டெலிகிராம் தளம் அந்நாட்டில் மிகவும் பிரபலம். அதிகளவிலான மக்கள் அதனை அங்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த தளம் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version