அருமனை அருகே உள்ள குஞ்சாலு விளையை சேர்ந்த ஸ்டீபன் மகன் மணிகண்டன் (23). இவரும் அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார் மகன் சிவப்பிரசாத் (27) என்பவரும் நண்பர்கள். மணிகண்டன் வீட்டிற்கு சிவப்பிரசாத் அடிக்கடி வருவது வழக்கம்.
நேற்று (செப்.,19) அவர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் கஞ்சாவை பாட்டிலில் போட்டு புகைத்து அதனை உறிஞ்சி சுவாசித்துக் கொண்டிருந்தனர். இதில் போதையில் புலம்ப தொடங்கினர். இந்த நிலையில் வீட்டிலிருந்து வித்தியாசமான வாசனையுடன் புகை வந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சென்று நடத்திய விசாரணையில் அவர்கள் போதையில் உளறிக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் வீட்டில் வீட்டில் இருந்த 10 கிராம் கஞ்சாவை கைப்பற்றி பின்னர் மணிகண்டன் சிவபிரசாத் இருவரையும் கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கஞ்சா வழங்கியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.