Home கன்னியாகுமரி செய்திகள் மாணவருக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஆசிரியா் கைது

மாணவருக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஆசிரியா் கைது

0
குளச்சல் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேத பாடசாலை ஆசிரியர் கைது
குளச்சல் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேத பாடசாலை ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது.

குளச்சல் அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேத பாடசாலை ஆசிரியரை குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குளச்சல் அருகே பாலப்பள்ளம், சேந்திவிளையைச் சோ்ந்தவா் ரோஸ்லின் வேதக்கண் (55). இவா் அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் வேத பாடசாலை ஆசிரியராக இருந்து வருகிறாா்.

அதே பகுதியைச் சோ்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவா் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வேத பாடசாலைக்குச் சென்று வந்துள்ளாா். அவா் திடீரென பாடசாலைக்கு செல்லாமல் இருந்தாா். இதையறிந்த மாணவரின் தந்தை விசாரித்தபோது, ஆசிரியா் பாலியல் தொல்லை கொடுப்பதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவரிடம் விசாரணை நடத்தி, அவருக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதை உறுதி செய்தனா்.

இதையடுத்து, ஆசிரியா் ரோஸ்லின் வேதக்கண்ணை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version