வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு – இந்தியாவின் சார்பில் ஓம் பிர்லா பங்கேற்பு

0
8

பிஎன்பி கட்​சி​யின் தலை​வர் தாரிக் ரஹ்​மான் நாளை (பிப்​ர​வரி 17-ம் தேதி) வங்​கதேச பிரதம​ராக பதவி​யேற்கிறார்.

வங்​கதேசத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற பொதுத்​ தேர்​தலில் மறைந்த வங்​கதேச பிரதமர் கலிதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்மான் தலை​மையி​லான பிஎன்பி கூட்​டணி அதிக இடங்களைக் கைப்​பற்​றியது. 300 இடங்​களைக் கொண்ட வங்கதேச நாடாளு​மன்​றத்​தில், 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களை பிஎன்பி கூட்​டணி கைப்​பற்றி அறு​திப் பெரும்​பான்​மை​யுடன் வெற்றி பெற்​றது.

இதன் ​மூலம் சுமார் 17 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் வங்​கதேசத்​தில் பிஎன்பி ஆட்சி அமைய உள்​ளது. வங்​கதேச பிரதம​ராக தாரிக் ரஹ்மான் நாளை(பிப்​ர​வரி 17) பதவி​யேற்க உள்​ளார். இந்​நிலை​யில், பதவி​யேற்பு விழாவுக்கு வருகை தரு​மாறு பிரதமர் மோடிக்​கு, வங்​கதேசம் நேற்று அழைப்பு விடுத்​துள்​ளது.

எனினும், வரும் 17-ம் தேதி பிரதமர் மோடி மும்​பை​யில் பிரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரனைச் சந்​தித்து பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளார். இதனைத் தொடர்ந்து டெல்​லி​யில் நடை​பெற உள்ள செயற்கை நுண்​ணறிவு தொடர்​பான உச்சி மாநாட்​டுக்கு அவர் தலைமை தாங்க உள்​ளார். இதனால், பிரதமருக்​குப் பதிலாக பதவி​யேற்பு விழாவுக்கு மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்லா, மத்​திய வெளி​யுறவுத் ​துறை செயலர் விக்​ரம் மிஸ்ரி ஆகியோர் செல்​ல​வுள்​ளனர்.

முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் பதவி​யிழப்​புக்​குப் பிறகு இந்​தியா – வங்​கதேசம் இடையே​யான உறவில் பின்​னடைவு ஏற்பட்டுள்ள நிலை​யில், இந்த அழைப்பு மிக​வும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாகப் பார்க்​கப்​படு​கிறது. இந்த பதவி​யேற்பு விழாவுக்கு வரு​மாறு பாகிஸ்​தான் உள்​ளிட்ட சார்க் நாடு​களின் தலை​வர்​கள், சீனா, மலேசி​யா போன்ற பிற நட்பு நாடு​களின் தலை​வர்​கள் ஆகியோ​ருக்​கும் அழைப்பு விடுக்​க வங்​கதேசம்​ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here