தக்கலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 27) காதலன் மாணவியைச் சந்திக்க அவரது வீட்டுப் பகுதிக்கு வந்துள்ளார்.
இதனை அப்பகுதி இளைஞர்கள் கண்டித்து காதலனைத் துரத்தி விட்டனர். இதனால் மனவருத்தம் அடைந்த மாணவி விஷத்தைக் குடித்துள்ளார். இதில் வாயில் நுரையைத் தள்ளியபடி போராடிய மாணவியை அவர் தாயார் கண்டு, உடனடியாக உறவினர்கள் துணையுடன் தக்கலை அரசு மருத்துவமனையில் மாணவியைச் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.