Home விளையாட்டு செய்திகள் தைபே ஓபன் பாட்மிண்டன்: தன்வி சர்மா சாம்​பியன்

தைபே ஓபன் பாட்மிண்டன்: தன்வி சர்மா சாம்​பியன்

0

தைபே ஓபன் சூப்​பர் 300 பாட்​மிண்​டன் போட்​டி​யின் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் இந்​திய வீராங்​கனை தன்வி சர்மா சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

தைபே ஓபன் பாட்​மிண்​டன் தொடர் சீன தைபே​யில் உள்ள தைபே சிட்​டி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் தன்வி ஷர்​மா, வியட்​நாம் வீராங்​கனை நியூயென் து லின்​னுடன் மோதி​னார்.

இதில் தொடக்​கம் முதலே தன்வி ஷர்மா அதிரடி​யாக விளையாடினார். சிறப்​பாக ஆடிய தன்வி ஷர்மா முதல் செட்டை 21-16 என வென்​றார்.

இதைப் போலவே 2-வது செட்​டிலும் விறு​விறுப்​பாக விளை​யாடிய தன்வி ஷர்மா அந்த செட்டை 21-16 என கைப்​பற்றி சாம்​பியன் பட்​டம் வென்று அசத்​தி​னார். இந்​தப் போட்டி​யில் பங்​கேற்ற இந்​தி​யா​வின் மற்​றொரு வீராங்கனையான உன்​னதி ஹூடா அரை​யிறு​தி​யில் தோல்வி அடைந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் இந்​தி​யா​வின் கிரண் ஜார்ஜ் கால் இறுதி​யில் தோல்வி அடைந்​தார். வெற்றி குறித்து தன்வி சர்மா கூறும்​போது, “இந்​தப் போட்​டி​யில் சாம்​பியன் பட்​டம் வெல்​வேன் என்று நான் எதிர்​பார்க்​கவே இல்​லை. இந்​தப் போட்​டி​யில் நான் என்​னுடைய சிறப்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்​தினேன் என்று நினைக்​கிறேன். இந்​தத் தொடரின் ஒவ்​வொரு சுற்​றி​லும் எனது ஆட்​டத்தை மேம்​படுத்​திக் கொண்டே வந்​தேன். அனைத்து ஆட்டங்களி​லும் எனது முழுத் திறனை​யும் வெளிப்​படுத்​தினேன்” என்​றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version