Home விளையாட்டு செய்திகள் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூஸி. அணியில் 7 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூஸி. அணியில் 7 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு

0

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்தத் தொடரில் 5 டி20 ஆட்டங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் டி20 தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக ரச்சின் ரவீந்திரா சேர்க்கப்படவில்லை. அதேவேளையில் லாக்கி ஃபெர்குசன், மேட்ஹென்றி, கைல் ஜேமிசன், ஜாக் ஃபோல்க்ஸ், ஜேக்கப் டஃபி, நேதன் ஸ்மித் உட்பட 7 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

முதல் டி20 போட்டி அக்டோபர் 22-ல் கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெறுது. 2-வது போட்டி 24-ம் தேதி அதே மைதானத்திலும், 3-வது போட்டி 27-ம் தேதி வெலிங்டனிலும், 4-வது போட்டி 30-ம் தேதி ஆக்லாந்திலும், கடைசி மற்றும் 5-வது போட்டி நவம்பர் 1-ம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறுகிறது.

அணி விவரம்: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), டிம் செய்ஃபர்ட், டெவோன் கான்வே, ஃபின் ஆலன், கிளென் பிலிப்ஸ், ஜாக் ஃபோல்க்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், ஆடம் மில்னே, பெவோன் ஜேக்கப்ஸ், ஜேக்கப் டஃபி, டேரில் மிட்செல், மார்க் சாப்மன், கைல் ஜேமிசன், மேட் ஹென்றி, நேதன் ஸ்மித், லாக்கி ஃபெர்குசன்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version