நியூஸிலாந்​துக்கு எதி​ரான டி20 போட்டி – 19 ரன்​கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

0
20

நியூஸிலாந்​துக்கு எதி​ரான 4-வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் 19 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்​றது. இதையடுத்து இந்​தத் தொடர் 2-2 என்ற கணக்​கில் சமநிலை​யில் உள்​ளது. தென் ஆப்​பிரிக்க அணி, நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 டி20 போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடி வரு​கிறது.

3 போட்​டிகள் முடிந்த நிலை​யில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது. இந்​நிலை​யில் நேற்று 4-வது டி20 போட்டி வெலிங்​டன் நகரில் நடைபெற்றது. இதில் முதலில் விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு 164 ரன்கள் குவித்​தது. டோனி டி சோர்ஸி 23, ரூபின் ஹெர்​மான் 28, டியான் பாரஸ்டர் 19, ஜேசன் ஸ்மித் 19, ஜார்ஜ் லிண்டே 14 ரன்​கள் சேர்த்​தனர்.

விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான கான எஸ்​டர்​ஹுய்​சன் அதிரடி​யாக விளை​யாடி 36 பந்​துகளில் 57 ரன்​கள் குவித்தார். இதில் 3 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​கள் அடங்​கும். நியூஸிலாந்து அணி தரப்​பில் கைல் ஜேமிசன் 2 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். ஜக்​காரி போல்க்​ஸ், பென் சியர்ஸ், கோல் மெக்​கோன்சி ஆகியோர் தலா ஒரு விக்கெட்​டைச் சாய்த்​தனர்.

இதையடுத்து 165 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் நியூஸிலாந்து அணி விளை​யாடத் தொடங்​கியது. ஆனால், தென் ஆப்​பிரிக்க வீரர்​களின் அபார​மான பந்​து​வீச்​சால் அந்த அணி 18.5 ஓவர்​களில் 145 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து தோல்வி கண்​டது. நியூஸிலாந்து அணி தரப்​பில் டிம் ராபின்​சன் 32, கேட்​டன் கிளார்க் 9, டேடேன் கிளிய​வர் 26, நிக் கெல்லி 19, பெவன் ஜேக்​கப்ஸ் 3, ஜேம்ஸ் நீஷம் 6, கோல் மெக்​கோன்சி 10, ஜோஷ் கிளார்க்​சன் 10, ஜக்​காரி போல்க்ஸ் 7, கைல் ஜேமிசன் 13, பென் சியர்ஸ் 2 ரன்​கள் எடுத்​தனர்.

தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் ஜெரால்டு கோட்ஸி 3 விக்கெட்​களைச் சாய்த்​தார். ஓட்​நீல் பார்ட்​மேன், பிரனலன் சுப்ராயன், கேசவ் மகா​ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், வியான் முல்​டர் ஒரு விக்​கெட்​டை​யும் வீழ்த்​தினர். அரை சதமடித்த கானர் எஸ்​டர்​ஹுய்​சன் ஆட்​ட​நாயக​னாகத் தேர்வு செய்​யப்​பட்​டார்.

இதையடுத்து 19 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்​றது. இதைத் தொடர்ந்து டி20 தொடர்​ தற்​போது 2-2 என்​ற கணக்​கில்​ சமநிலை​யில்​ உள்​ளது. இவ்விரு அணி​களுக்​கு இடையி​லான 5-வது மற்​றும்​ கடைசி டி20 போட்​டி வரும்​ 25-ம்​ தே​தி கிறைஸ்​ட்​சர்​ச்​ மைதானத்தில்​ நடைபெறவுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here