Home தேசிய செய்திகள் ‘ஜனநாயகன்’ மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

‘ஜனநாயகன்’ மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

0

தவெக தலைவர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கி உள்ளார்.

கடந்த 9-ம் தேதி உலகம் முழுவதும் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது.

இதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறு ஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது.

மேல்முறையீட்டு வழக்கை ஜனவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைத்த உயர் நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்ய தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version