இந்தியா – பாக். கிரிக்கெட் போட்டிக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

0
14

இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான கிரிக்​கெட் போட்​டிக்​குத் தடை கோரிய மனுவை விரைந்து விசா​ரிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது.

ஊர்​வசி ஜெயின் உள்​ளிட்ட சட்​டக் கல்​லூரியை சேர்ந்த 4 மாணவர்​கள் தாக்​கல் செய்த ரிட் மனு​வில், கிரிக்​கெட் என்​பது இரு நாடு​களுக்கு இடையே நட்​பை​யும், இணக்​கத்​தை​யும் வெளிப்​படுத்​துவ​தாகும். பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு பாகிஸ்​தானுடன் இந்​தியா கிரிக்​கெட் விளை​யாடு​வது படை வீரர்​கள், பயங்​கர​வா​தி​களின் தாக்​குதலில் பலி​யான உறவினர்​களின் மன உறு​தியை குலைக்​கும்.

இதனால் துபா​யில் நடை​பெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரில் வரும் ஞாயிற்​றுக்​கிழமை இந்​தியா – பாகிஸ்​தான் பங்​கேற்​கும் போட்​டிக்​குத் தடை விதிக்க வேண்​டும் என கோரி​யிருந்தனர்.

இந்த மனுவை அவசர​மாக விசா​ரிக்​கக் கோரி உச்​சநீ​தி​மன்ற நீதிபதி ஜே.கே. மகேஸ்​வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு முன் ஆஜரான வழக்​கறிஞர், இந்​தியா – பாகிஸ்​தான் பங்​கேற்​கும் ஆசிய கோப்பை கிரிக்​கெட் போட்டி ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெறவுள்​ள​தால், தடை கோரும் மனுவை வெள்​ளிக்​கிழமை (இன்​று) விசா​ரிக்க வேண்​டும் என முறை​யிட்​டார்.

இந்த விவ​காரத்தை அவசர​மாக விசா​ரிக்க என்ன அவசரம் உள்​ளது? கிரிக்​கெட் போட்​டி​தானே நடக்​கட்​டும். ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெறவுள்ள போட்​டிக்கு என்ன செய்ய முடி​யும்? என்று கேட்​டு, முறை​யீட்டை உச்ச நீதி​மன்​ற நீதிப​தி​கள்​ நிராகரித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here