Home தேசிய செய்திகள் ஆபத்தான நாய்களை கருணை கொலை செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

ஆபத்தான நாய்களை கருணை கொலை செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

0

வெறிநோய் மற்​றும் குணப்​படுத்த முடி​யாத நோயால் பாதிக்​கப்​பட்ட ஆபத்​தான நாய்​களை கருணை கொலை செய்​ய​லாம் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

டெல்​லி​யில் தெரு நாய்​கள் கடித்து சிறு​வர்​களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்​பட்​டது குறித்து வெளி​யான செய்​தி​யின் அடிப்படையில் உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​குப் பதிவு செய்​துள்​ளது. இந்த வழக்கை நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்தீப் மேத்​தா, அன்​ஜாரியா ஆகியோர் அடங்​கிய அமர்வு விசாரித்து நேற்று முக்​கிய உத்​தர​வு​களைப் பிறப்​பித்​தது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: தெரு ​நாய்​கள் தொடர்​பாக கடந்த ஆண்டு நவம்​பரில் உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை திரும்ப பெறக் கோரி பல்​வேறு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்டு உள்​ளன. இந்த உத்​தர​வு​கள் திரும்ப பெறப்பட மாட்​டாது. விலங்குகள் நல வாரிய விதி​களை மாநில அரசுகள் முறை​யாக அமல்​படுத்த வேண்​டும். ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் விலங்​கு​கள் கருத்​தடை மையத்தை அமைக்க வேண்​டும்.

தெரு நாய்​களின் எண்​ணிக்கை அதி​க​மாக இருக்கும் பகு​தி​யில் விலங்​கு​கள் கருத்​தடை மையங்​களை​ அதி​கரிக்க வேண்​டும். அனைத்து அரசு, தனி​யார் மருத்​து​வ​மனை​களி​லும் போது​மான அளவு ரேபிஸ் தடுப்​பூசிகளை வைத்​திருக்க வேண்​டும். நாய்க் கடி, அதற்​கான முதலுதவி சிகிச்சை குறித்து பள்​ளி, கல்​லூரி​களின் மாணவ, மாண​வியரிடையே விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்டும்.

ரயில் நிலை​யங்​கள், பேருந்து நிலை​யங்​கள், விளை​யாட்டு அரங்கு​கள், மருத்​து​வ​மனை​களில் தெரு நாய்​கள் நுழைவதைத் தடுக்க வேண்​டும். இதுதொடர்​பாக பிறப்​பிக்​கப்​பட்ட உத்தரவுகளை கண்​டிப்​புடன் பின்​பற்ற வேண்​டும். வெறிநோய் மற்​றும் குணப்​படுத்த முடி​யாத நோயால் பாதிக்​கப்​பட்ட ஆபத்தான நாய்​களை கருணை கொலை செய்​ய​லாம். உச்ச நீதிமன்​ற உத்​தர​வு​களை அமல்​படுத்தும் அரசு ஊழியர்​கள் மீது வழக்​கு​கள் பதிவு செய்​யக் கூடாது. இவ்​வாறு நீதிப​தி​கள் உத்தரவிட்​டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version