தொழில்நுட்பங்களை மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்காக, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டதற்காக, சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது. திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில், மேங்கோபி நிறுவனத்தின் தெற்கு ஆசிய பிராந்திய மூத்த கூட்டாண்மை மேலாளர் இந்த விருதை கல்லூரி தாளாளர் காட்வினுக்கு வழங்கினார். முதல்வர் முனைவர் மகேஸ்வரன் உட்பட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
 
            

