Home கன்னியாகுமரி செய்திகள் நாகா்கோவில் பள்ளி மாணவா் தற்கொலை: 3 ஆசிரியா்கள் பணியிடமாற்றம்

நாகா்கோவில் பள்ளி மாணவா் தற்கொலை: 3 ஆசிரியா்கள் பணியிடமாற்றம்

0

நாகா்கோவில் அரசுப் பள்ளியில் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, அப்பள்ளியின் தலைமையாசிரியா் உள்பட 3 ஆசிரியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, குறத்தியறை, கீரன்குளம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி விக்டா் தாமஸ், லென்சி தம்பதியின் மகன் கவின் ஜெனில் (16). நாகா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்த இவா், ஆக. 21ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மாணவரின் தற்கொலைக்கு ஆசிரியா்களே காரணம்; அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாணவரின் தாய் மற்றும் உறவினா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினிடம் புகாரளித்தனா். மேலும், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்நிலையில், ஆசிரியா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாணவரின் உடலை வாங்க குடும்பத்தினா் மறுத்தனா்.

இது குறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜுக்கு, மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவிட்டாா். அதன்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பள்ளித் தலைமையாசிரியா், உதவித் தலைமையாசிரியா், உடற்கல்வி ஆசிரியா் ஆகியோரை இடலாக்குடி, வல்லன்குமாரன்விளை, தோவாளை ஆகிய பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

எனினும், கவின் ஜெனில் குடும்பத்தினா் அவரது உடலை வாங்க மறுத்து வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version