சுகா இயக்கத்தில், இசக்கி கார்வண்ணன் தனது லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘சைலப்பன் சைக்கிள் மார்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, மூணார் ரமேஷ், இயக்குநர் சுப்ரமணிய சிவா, பூஜா மோகன்ராஜ், கதா நந்தி, சுர்ஜித் கோபிநாத், வித்யா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். மார்ட்டின் டான்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“தென் தமிழகத்துக் கிராமம், அங்கு வாழும் மனிதர்கள் மற்றும் அவர்களது வாழ்வில் நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு, நகைச்சுவை கலந்து, குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
எளிய மனிதர்கள் வாழும் உண்மையான உலகத்தை அசலாகப் பிரதிபலிக்கும் படைப்பாக இது இருக்கும்” என படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தின் முதல் தோற்றத்தை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.



