செப்.8-ல் நட்சத்திர வாலிபால் போட்டி

0
232

திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் ‘தைபா செலிபிரிட்டி வாலிபால் லீக்’ போட்டி சென்னையில் வரும் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது.

கே.எஸ்.டி. ஸ்டுடியோஸ், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் ஆதரவோடு முதலாவது தைபா செலிபிரிட்டி வாலிபால் லீக் போட்டியை சென்னையில் நடத்துகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்தப் போட்டியில் சென்னை ஸ்டார்ம்ஸ், மதுரை ஹரிகேன்ஸ், கோவை தண்டர்ஸ் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கின்றன.சென்னை அணிக்கு மாகாபாவும், மதுரை அணிக்கு கே.பி.ஒய். தீனாவும், கோவை அணிக்கு ஜூனியர் எம்ஜிஆரும் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here