குமரி மாவட்டத்தில் இன்று 16ஆம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் மக்களை சந்திக்கிறார். மருங்கூர், மண்டைக்காடு, புதுக்கடை பேரூராட்சிகள் மற்றும் ஆலங்கோடு, பிராகோடு, சாந்தபுரம் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களுக்காக முகாம்கள் நடைபெறுகின்றன. ராஜாவூர், மண்டைக்காடு, புதுக்கடை, ஆலங்கோடு, பிராகோடு, சாந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள சமுதாய நலக்கூடங்கள் மற்றும் ஆடிட்டோரியங்களில் இந்த முகாம்கள் நடைபெறும்.














