குமரி மாவட்டத்தில் இன்று 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 41, 42க்கு இருளப்பபுரம் அக்ஷயா மஹால், கொல்லங்கோடு நகராட்சி வார்டு 21, 28, 29க்கு ஸ்ரீ பத்ரா ஆடிட்டோரியம், திங்கள்நகர் பேரூராட்சி வார்டு 9 முதல் 15க்கு குமார் திருமண மண்டபம், முட்டம் ஊராட்சிக்கு ஜே பி ஆர் திருமண மண்டபம், தர்மபுரம் ஊராட்சிக்கு இலந்தையடித்தட்டு ஆதிபராசக்தி கோயில் மண்டபம், தோவாளை ஊராட்சிக்கு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.