கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேச்சு போட்டி

0
310

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையின் நிதி மூலமாக கலைஞர் தமிழ் மன்றம் சார்பில் பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய போட்டிகள் நேற்று நடந்தன. போட்டிகளுக்கு கல்லூரி முதல்வர் பிரகாசி அருள்ஜோதி தலைமை தாங்கினார். பேராசிரியை ஆனந்த நாயகி வரவேற்றார்.

பேராசிரியை சுகிர்தா பஸ்மத் முன்னிலை வகித்தார். போட்டியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 75 மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும், 2-ம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ. 3 ஆயிரமும், 3-வது பரிசு பெற்றவர்களுக்கு ரூ. 2 ஆயிரமும் வழங்கப்பட்டது. முடிவில் பேராசியர் டெல்பின் நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கலைஞர் தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் அமுதன் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here