கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சி கூட்டரங்கில் திருநங்கைகள் திருநம்பிகள் மற்றும் இடைபாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கலந்துகொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு முகாம்மினை பார்வையிட்டார். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.