‘திருஷ்யம் 3’ படத்தைப் பார்த்து தந்தையைக் கொன்றுவிட்டு தப்பிய மகன்

0
18

திருஷ்யம்-3 படத்​தைப் பார்த்​து​விட்டு தந்தையைக் கொன்​று​விட்டு மகன் தப்​பியோடி​னார். செல்​போன் சிக்​னலை வைத்து அவரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரித்து வருகின்றனர்.

பிஹார் மாநிலம் சமஸ்​திபூர் அரு​கிலுள்ள தார்வா கிராமத்​தைச் சேர்ந்​தவர் ரகு​வீர் சாஹ்னி (50). இவரது மகன் சிவசங்​கர் சாஹ்னி. தந்​தைக்​கும், மகனுக்​கும் இடையே நீண்ட கால​மாக சொத்​துத் தகராறு இருந்து வந்​துள்​ளது. விவ​சாய நிலத்தை விற்​பனை செய்து தனது பங்கை தராத​தால் தந்​தை​யிடம், சிவசங்​கர் அடிக்​கடி தகராறு செய்து வந்​துள்​ளார். இதையடுத்து அவர் தந்​தையை விட்​டுப் பிரிந்து மனை​வி​யுடன் சூரத்​தில் வசித்து வரு​கிறார்.

இந்​நிலை​யில் அண்​மை​யில் திருஷ்​யம்-3 இந்​திப் படத்தை சிவசங்கர் பார்த்​துள்​ளார். அதில் வரும் நாயகன் அஜய் தேவ்​கன், கொலையை மறைப்​ப​தற்​காக தடயங்​கள், சாட்​சிகளை குழப்புதல், டிஜிட்​டல் தடயங்​களை அழிப்​ப​தைப் பார்த்த அவர் அதே​போல் தந்​தையைக் கொலை செய்ய முடிவு செய்​துள்​ளார்.

இதையடுத்து சூரத்​திலிருந்து 2 ஆயிரம் கிலோமீட்​டர் பயணம் செய்து பிஹாருக்கு வந்​துள்​ளார். தனது செல்​போனை ஆஃப் செய்து​விட்டு கிராமத்​துக்கு வந்த அவர், வீட்​டின் பின்​வாசல் வழியாக நுழைந்து தூங்​கிக் கொண்​டிருந்த தந்​தையை கோடாரியால் வெட்டிக் கொன்​றுள்​ளார்.

செல்போன் சிக்னல் உதவியது

பின்​னர் அவர் படோரி ரயில் நிலை​யத்​துக்​குச் சென்​றுள்​ளார். அப்போது அணைத்து வைத்த செல்​போனை ஆன் செய்து மனைவி​யுடன் பேசி​யுள்​ளார். மீண்​டும் செல்​போனை ஆஃப் செய்து​விட்டு ஊருக்​குத் திரும்​பி​யுள்​ளார்.

ரகு​வீரை கொலை செய்​தது யார் எனத் தெரி​யாமல் போலீ​ஸார் திண்​டாடி வந்​த நிலையில் படோரி ரயில் நிலையத்தில் அவர் சிறிது நேரம் செல்போன் பயன்படுத்தியது முக்கியத் தடயமாக கிடைத்தது. அதை வைத்து சிவசங்​கரை போலீ​ஸார் கைது செய்தனர். விசா​ரணை​யி்ல், திருஷ்​யம்-3 திரைப்​படத்​தைப் பார்த்த பிறகு இந்​தக் கொலை​யைத் திட்​ட​மிட்​ட​தாகச் சிவசங்​கர் ஒப்​புக்​கொண்​டார்​. அவர்​ தற்​போது நீதி​மன்​றக்​ காவலில்​ வைக்கப்பட்​டுள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here