ஒருநாள் போட்டி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம்

0
25

மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி பேட்​டிங் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்​திய அணி​யின் தொடக்க வீராங்​க​னை​யான ஸ்மிருதி மந்​தனா 828 புள்​ளி​களு​டன் முதலிடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளார்.

29 வயதான மந்​த​னா, நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக 109 ரன்​கள் விளாசி​யிருந்​தார். கடைசி​யாக வங்​கதேச அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் 34 ரன்​கள் சேர்த்​திருந்​தார். ஆஸ்​திரேலி​யா​வின் ஆஷ் கார்ட்​னர் 731 புள்​ளி​களு​டன் 6 இடங்​கள் முன்​னேறி 2-வது இடத்தை பிடித்​துள்​ளார். அவர், இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சதம் விளாசி​யிருந்​தார்.

தென் ஆப்​பிரிக்க அணி​யின் கேப்​டன் லாரா வால்​வார்ட் 2 இடங்​கள் முன்​னேறி 716 புள்​ளி​களு​டன் 3-வது இடத்தை அடைந்​துள்​ளார். இங்​கிலாந்​தின் எமி ஜோன்ஸ் 656 புள்​ளி​களு​டன் 4 இடங்​கள் முன்​னேறி 9-வது இடத்தை பிடித்​துள்​ளார். இந்​தி​யா​வின் பிர​திகா ராவல் 564 புள்​ளி​களு​டன் 27-வது இடத்​துக்​கு
முன்னேறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here