ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் கடந்த 2023 -ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் கவுரவ வேடத்தில் நடித்த சிலர் இதிலும் நடிக்கின்றனர். அவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த சிவ ராஜ்குமார் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. அவர், படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
Latest article
குமரி: 6 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ். ஐ. அதிரடி இடமாற்றம்
நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கும், 3 இன்ஸ்பெக்டர்கள் குமரி மாவட்டத்திற்குள்ளேயே வேறு காவல்...
குமரி: மனநலம் பாதித்த பெண்ணை இல்லத்தில் சேர்த்த போலீசார்
வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த, மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் கண் பார்வையற்ற செல்வகுமாரியை கவனிக்க யாரும் இல்லாததால், காவல்துறையின் உதவியை நாடினர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவித்த நிமிர் திட்ட குழுவினர்...
குமரி: காதலி பேசாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மீனச்சல் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (23) என்ற இளைஞர், காதலி பேசியதை நிறுத்தியதால் மனமுடைந்து நேற்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்....














