சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன்: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

0
23

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

சிங்​கப்​பூரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்​றில் ஒலிம்​பிக்​கில் 2 முறை பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் பி.​வி.சிந்​து, போட்​டித் தரவரிசை​யில் 5-வது இடத்​தில் உள்ள இந்​தோ​னேஷி​யா​வின் புத்ரி குசுமா வர்தானியுடன் மோதி​னார். இதில் பி.​வி.சிந்து 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்னேறினார். 2-வது சுற்​றில் சிந்​து, ஜப்​பானின் ரிகோ கன்ஜியுடன் மோதுகிறார்.

அதேவேளை​யில் இளம் இந்​திய வீராங்​க​னை​யான உன்னதி ஹூடா 14-21, 10-21 என்ற செட் கணக்​கில் ஜப்​பானின் டோமோகா மியா​சாகி​யிடம் தோல்வி அடைந்​தார். ஆடவர் இரட்​டையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் சாட்விக்​சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 26-28, 21-15, 21-13 என்ற செட் கணக்​கில் மலேசி​யா​வின் சென் ஜி யி, பிரெஸ்லி ஸ்மித் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்​றில் நுழைந்​தது.

ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் ஆயுஷ் ஷெட்டி 21-11,14-21,12-21 என்ற செட் கணக்​கில் டென்​மார்க்​கின் விக்​டர் அக்​செல்​சனிடம் தோல்வி அடைந்​தார். மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் கவிப்​பிரியா செல்வம், சிம்​ரன் சிங்கி ஜோடி 21-18, 13-21, 5-21 என்ற செட் கணக்கில் ஸ்பெ​யினின் பவுலா லோபஸ், லூசியா ரோட்​ரிக்ஸ் ஜோடி​யிடம் தோல்வி அடைந்​தது. மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​தியாவின் அஸ்​வினி பாத், ஷிகா கவுதம் ஜோடி 16-21, 11-21 என்ற செட் கணக்​கில் சீன தைபே​வின் சாங் சிங் ஹுய், யாங் சிங் டுன்​ ஜோடி​யிடம்​ வீழ்ந்​தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here