Home கன்னியாகுமரி செய்திகள் வெள்ளிச்சந்தை: நாய் குறுக்கே  பாய்ந்து பூசாரி படுகாயம்

வெள்ளிச்சந்தை: நாய் குறுக்கே  பாய்ந்து பூசாரி படுகாயம்

0

வெள்ளிச்சந்தை அருகே கல்படிப் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (70). கோயில்களில் பூஜை மற்றும் ஹோமங்களுக்கு செல்வது வழக்கம். இவர் பக்கத்து ஊரான மணவிளை தமிழ்செல்வன் என்பவரின் மகள் புதிதாக வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டில் பால் காய்ச்சும்  நிகழ்ச்சி நடந்தது. அதற்காக தமிழ்ச்செல்வன் சதாசிவத்தை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றார்.

       நிகழ்ச்சி முடிந்து இரண்டு பேரும் ஊருக்கு திரும்பினர். பைக்கை தமிழ் செல்வன் ஓட்டினார்.   அப்போது பைக்கின் குறுக்கு திடீரென நாய் பாய்ந்தது. இதில் தமிழ்ச்செல்வன் பைக் திடீர் பிரேக் போட்ட போது,   மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சதாசிவத்திற்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version