கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் (65) என்பவர், சூழால் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். ஏற்கனவே தலையில் ரத்தக்கட்டு காரணமாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று அதிகாலை பெட்ரோல் பங்க் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கொல்லங்கோடு போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
