குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுமார் 2.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த இரணியல் அரண்மனையை ரூ. 4.85 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜான்சி ராணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
