வெள்ளிச்சந்தை: பெண்ணை மிரட்டிய கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

0
183

வெள்ளிச்சந்தை அருகே முட்டம் ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்தவர் தாசன். இவரது மனைவி அபிஷா (22). இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. தற்போது அபிஷாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் அவர் தனது தாயார் வீட்டில் உள்ளார். அபிஷாவின் நகைகளை ஏற்கனவே கணவர் விட்டார் வாங்கி அடகு வைத்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கணவர் தாசன், அவரது சகோதரர் ஆனந்த், தாயார் கில்டர் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று தாசன், ஆனந்த், கில்டா ஆகிய மூன்று பேரும் அபிஷாவின் தாயார் வீட்டுக்கு சென்று தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இது குறித்து அபிஷா வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here