Home விளையாட்டு செய்திகள் ஐபிஎல் போட்​டி​யின் சேஸிங்​கில் சதம் விளாசிய 4-வது கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர்

ஐபிஎல் போட்​டி​யின் சேஸிங்​கில் சதம் விளாசிய 4-வது கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர்

0

ஐபிஎல் போட்​டி​யில் சேஸிங்​கின்​போது சதம் விளாசிய 4-வது வீரர் என்ற பெரு​மையை பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பெற்​றுள்​ளார்.

நேற்று முன்​தினம் லக்​னோ​வில் நடை​பெற்ற லீக் போட்​டி​யின்​போது பஞ்​சாப் கிங்ஸ் அணி 7 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்​தப் போட்​டி​யின்​போது பஞ்​சாப் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 51 பந்​துகளில் 11 பவுண்​டரி, 5 சிக்​ஸர்​களு​டன் 101 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

இதன்​மூலம் ஐபிஎல் போட்டி சேஸிங்​கின்​போது சதம் விளாசிய 4-வது கேப்​டன் என்ற பெரு​மையை ஸ்ரேயஸ் ஐயர் பெற்​றுள்​ளார். இதற்கு முன்பு விரேந்​தர் சேவாக்​ (2011 டெக்​கான் சார்​ஜர்​ஸுக்கு எதி​ராக 119), விராட் கோலி (2016-ல் ரைசிங் புனே சூப்​பர் ஜெயண்ட்​டுக்கு எதி​ராக 108*), சஞ்சு சாம்​சன்​ (2021-ல் பஞ்​சாப் கிங்​ஸுக்கு எதி​ராக 119) ஆகியோ​ரும் இந்த பெரு​மை​யைப் பெற்​றிருந்​தனர். தற்​போது அந்​தப் பட்​டியலில் ஸ்ரேயஸ் ஐயரும் இணைந்​துள்​ளார்.

3-வது கேப்​டன்: மேலும், ஐபிஎல் போட்​டி​யில் பஞ்​சாப் கிங்ஸ் அணிக்​காக சதம் விளாசிய 3-வது கேப்​டன் என்ற சாதனையை​யும் ஐயர் படைத்​துள்​ளார்.

இதற்கு முன்பு பஞ்​சாப் அணிக்கு கேப்​ட​னாக இருந்த கே.எல்​.​ராகுல்​(2020-ல் ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு​வுக்கு எதி​ராக 132*), ஆடம் கில்​கிறைஸ்ட் (2011-ல் ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு​வுக்கு எதி​ராக 106) ஆகியோர் இந்த சாதனையைப் படைத்​திருந்​தனர்.

7 ஆயிரம் ரன்​கள்: அது​மட்​டுமல்​லாமல், இந்​தப் போட்​டி​யின்​போது டி20 கிரிக்​கெட் போட்​டிகளில் 7 ஆயிரம் ரன்​களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்​துள்​ளார் ஸ்ரேயஸ் ஐயர். இது​வரை 254 டி20 போட்​டிகளில் விளை​யாடி 35.02 ரன்​கள் சராசரி​யுடன் அவர் 7,076 ரன்​களைச் சேர்த்​துள்​ளார். மேலும், இந்த ஐபிஎல் தொடரில் 13 இன்​னிங்​ஸ்​களில் விளை​யாடி​யுள்ள ஸ்ரேயஸ் 55.33 சராசரி​யுடன் 498 ரன்​களைச் சேர்த்​துள்​ளார். இதில்​ ஒரு சதம்​, 5 அரை சதங்​கள்​ அடங்​கும்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version