Home விளையாட்டு செய்திகள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

0

தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலிய அணி​கள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்​பனில் நடைபெற்றுவந்தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஆஸ்திரேலியா 390 ரன்​களும், தென் ஆப்​பிரிக்கா 284 ரன்​களும் எடுத்​தன. 106 ரன்கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 314 ரன்​கள் எடுத்த நிலை​யில் டிக்​ளேர் செய்​தது.

இதையடுத்து 421 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 41 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 102 ரன்​கள் எடுத்​திருந்​தது. எய்​டன் மார்க்ரம் 45, வியான் முல்​டர் 5 ரன்​களு​டன் நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்​தனர். வியான் முல்​டர் 29 ரன்​களில் ஜோஷ் ஹேசில்​வுட் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதைத் தொடர்ந்து கைல் வெரைய்ன் 1, மார்கோ யான்​சன் 34, சைமன் ஹார்​மர் 0 ரன்​களில் நடையை கட்​டினர்.

தாக்​குப்​பிடித்து விளை​யாடிய எய்​டன் மார்க்​ரம் 237 பந்​துகளில், 10 பவுண்​டரி​களு​டன் 75 ரன்​கள் எடுத்த நிலை​யில் மிட்​செல் ஸ்டார்க் பந்​தில் வெளி​யேறி​னார். கடைசி வீர​ராக அன்​ரிச் நோர்க்​கியா 4 ரன்​களில் நடையை கட்ட தென் ஆப்​பிரிக்க அணி 86.5 ஓவர்​களில் 206 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஆஸ்​திரேலிய அணி சார்​பில் ஜோஷ் ஹேசில்​வுட் 6, மேட் ரென்ஷா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். மிட்​செல் ஸ்டார்க், பாட் கம்​மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

214 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி 3 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 18-ம் தேதி கெபர்​கா​வில் தொடங்​கு​கிறது.

முதல் தோல்வி

டர்​பன் டெஸ்ட் போட்​டி​யில் ஆஸ்​திரேலி​யா​விடம் 214 ரன்​கள் வித்தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்கா தோல்வி அடைந்​தது. கேப்டனாக தெம்பா பவுமாவுக்கு டெஸ்ட் கிரிக்​கெட்​டில் இது முதல் தோல்​வி​யாக அமைந்​தது. இதற்கு முன்​னர் அவரது தலைமை​யில் தென் ஆப்​பிரிக்க அணி 11 டெஸ்​டில்​ வெற்​றி பெற்றிருந்​தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version