கடையால் பேரூராட்சிக்குட்பட்ட போங்காலை பகுதியை சேர்ந்த தொழிலாளி சுந்தர்ராஜ் (59) வீட்டில் மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தபோது, ரூ.94 ஆயிரம் கட்ட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிகிறது. 24 நாட்கள் மின் இணைப்பு இல்லாத நிலையில், நேற்று சுந்தர்ராஜ் தனது குடும்பத்துடன் மின்வாரிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். கடையால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.