நெய்யூர் அருகே சேனம்விளையில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் நேற்று பிரின்ஸ் எம்எல்ஏ வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். நோயாளிகளைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தபோது, உள்நோயாளிகள் பயன்பாட்டிற்கான துணிகளைத் துவைக்க வாஷிங் மெஷின் இல்லை என்பதை அறிந்தார். உடனடியாக, எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து புதிய வாஷிங் மெஷினை வாங்கி, உள்நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில் நெய்யூர் பேரூர் காங்கிரஸ் தலைவர் ஜான் ரோஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.














