நூலிழையில் தொங்கும் அரையிறுதி வாய்ப்பு: இந்தியா – அர்ஜெண்டினா இன்று பலப்பரீட்சை | Hockey WC

0
27

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 2-வது சுற்றில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் 1-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்திருந்தது.

ஆனால் இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 1-3 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வீழ்த்தியது. இதனால் கணித ரீதியாக இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது. இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு அர்ஜெண்டினாவுடன் மோதுகிறது. இந்த போட்டிக்கு பின்னர் நெதர்லாந்து – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த மோதலின் முடிவை பொறுத்தே இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு தெரியவரும்.

இந்தியா அரை இறுதியை எட்டுவதற்கு சிறு வாய்ப்பாவது இருக்க வேண்டுமானால், நெதர்லாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தியாக வேண்டும். ஒருவேளை இந்த ஆட்டம் டிராவில் முடிந்தாலோ அல்லது இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலோ, அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். நெதர்லாந்து அணி ஏற்கெனவே 6 புள்ளிகளுடன் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

இங்கிலாந்து, அர்ஜெண்டினா அணிகள் தலா 3 புள்ளிகளை பெற்று சமநிலையில் உள்ளன. இந்திய அணி புள்ளி கணக்கை தொடங்கவில்லை. அரை இறுதியை வாய்ப்பை பெறவேண்டுமானால் இந்திய அணி அர்ஜெண்டினாவை குறைந்தபட்சம் 2 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதேவேளையில் இங்கிலாந்து அணி நெதர்லாந்திடம் குறைந்தபட்சம் 3 கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய வேண்டும். இது நிகழ்ந்தால் இந்திய அணியும் 3 புள்ளிகளை எட்டும்.

அந்த சூழ்நிலையில் இந்தியா, அர்ஜெண்டினா, இங்கிலாந்து ஆகிய 3 அணிகளும் சமமான புள்ளிகளுடன் இருக்கும். அப்போது கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here