கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பூங்காவில் ரூ. 3.49 கோடி செலவில் அறிவியல் அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, அறிவியல் உபகரணங்கள் இங்கு வந்துள்ளன. PSLV ராக்கெட் மாடல் உட்பட பல்வேறு உபகரணங்கள் வந்துள்ள நிலையில், அவை பூங்காவில் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.