கிள்ளியூர் பள்ளியாடி பகுதியை சேர்ந்த ஜான்சுந்தர் மற்றும் அவரது தம்பி ஜெயக்குமார் இடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது. தூய்மை பணியாளரான ஜெயக்குமார், நேற்று மாலை தனது அண்ணன் வீட்டில் மின்வாரிய ஊழியர் அரவிந்த் பணி செய்ய சுவரில் ஏறியதைக் கண்டு தகராறு செய்து, அரிவாளால் அவரது காலில் வெட்டியுள்ளார். தக்கலை போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.














