ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டி, அந்த நாடுகளைச் சேர்ந்த தோழிகள் 2 பேர், தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஷெனியா(27), உக்ரைனைச் சேர்ந்தவர் இலியானா(29). இவர்கள் இருவரும், இரு நாடுகளிடையே போர் தொடங்குவதற்கு முன்பிருந்தே தோழிகளாக உள்ளனர். அண்மையில் இந்தியா வந்த இருவரும், இரு நாடுகளிடையே போர் நிறுத்தம், அமைதி வேண்டி தமிழக கோயில்களில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக கும்பகோணம் பகுதியில் உள்ள திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கஞ்சனூர் சுக்கிரன், திருமணஞ்சேரி ஆகியகோயில்களில் வழிபாடு நடத் தினர். கும்பகோணத்தைச் சேர்ந்தபுகழேந்தி, இவர்களை வழிநடத் தினார். இந்நிலையில், ஆடுதுறை அருகேயுள்ள 69 சாத்தனூர் கிராமத்தில் உள்ள திருமந்திரம் அருளிய திருமூலர் கோயிலில் நேற்று இருவரும் வழிபாடு செய்தனர்.
நம்பிக்கை வீண்போகாது: அதைத்தொடர்ந்து, செய்தி யாளர்களிடம் ஷெனியா, இலியானா கூறியது: ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் முடிவுக்கு வர வேண்டும் என கோயில்களில் வழிபாடு செய்து வருகிறோம். எங்களது நம்பிக்கை வீண் போகாது. இரு நாடுகளிலும் அமைதி ஏற்படும் என நம்புகிறோம். அடுத்து, மதுரை மீனாட்சி அம்மன், பழநி, திருவண்ணாமலை ஆகிய கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்த உள்ளோம் என்றனர்.